சென்னை: இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வெளியாக உள்ள அஜித்தின் வலிமை படத்தை அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். சமீபத்தில் வலிமை படத்தின் டீசர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது வலிமை படம் சுமார் 2 மணிநேரம் 58 நிமிடம், 35 வினாடிகள் ஓடும் வகையில் உருவாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதையும் பிறக்க இருக்கும் புத்தாண்டோடு அஜித் ரசிகர்கள் அதகளப்படுத்தி வருகின்றனர்.

மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகி வருகிறது அஜின் நடித்கும் வலிமை திரைப்படம். தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல நடிகை மறைந்த ஸ்ரீதேவியின் கணவர்  போனி கபூர் தயாரித்து வரும் இந்தப் படத்தை  ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். ‘வலிமை’ படத்தில் அஜித்துடன் ஹியூமா குரோஷி, கார்த்திகேயா, பானி, சுமித்ரா, அச்சியுந்த் குமார், ராஜ் அய்யப்பா, யோகி பாபு, புகழ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன், எடிட்டராக விஜய் வேலுகுட்டி, சண்டைக் காட்சிகளின் இயக்குநராக திலீப் சுப்பராயன், கலை இயக்குநராக கே.கதிர், ஆடை வடிவமைப்பாளராக அனுவர்தன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

இந்த படம் கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், அடுத்து நாடு முழுவதும் பரவிய கொரோனா தொற்று மற்றும் அதைத்தொடர்ந்து அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக, படத்தின் படப்பிடிப்பு தொடர முடியாமல் இருந்து வந்தது. பின்னர் கொரோனா தொற்று குறையத் தொடங்கியதும், படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டதும் மீண்டும் வலிமை படத்தின் படிப்பு வலிமையுடன் தொடங்கியது.  அதைத்தொடர்ந்து படப்பிடிப்பின் படப்பிடிப்பு முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து கடந்த ஜூன் மாதத்தில், வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு, கடந்த மாதம் ரஷ்யாவில் நடந்து முடிந்தது. அப்போது அஜித், ரஷ்யாவில் பைக்கில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. அதையடுத்து படத்தை வெளியிடுவதற்கான   இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்றன.

இதற்கிடையில் வலிமை படம் 2022ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என தயாரிப்பாளர் போனிகபூர் கடந்த செப்டம்பர் மாதத்தில் அறிவிப்பு வெளியிட்டார். இதனால் அஜித் ரசிகர்கள், வலிமையை எதிர்நோக்கி காத்திருந்தனர். இதற்கிடையில் வலிமை படத்தின்,  டீசர், பாடல்கள், மேக்கிங் வீடியோ மற்றும் தீம் மியூசிக் என அடுத்தடுத்து வெளியிடப்பட்டது. இதுரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று வந்த நிலையில், படம் எப்போது வெளியாகும் என எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தநிலையில், அஜித் மாஸ் காட்டும் வசனங்களுடன் வலிமை படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. இதனை திருவிழாப் போன்று அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று வலிமை படத்துக்கு யு/ஏ (U/A) சான்றிதழ் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பொங்கல் பண்டிகை வர இன்னும் இரு வாரமே உள்ள நிலையில், அன்றைய தினம் வெளியாக உள்ள  வலிமை படத்துக்கு இந்திய திரைப்பட தணிக்கைக் குழு  சான்றிதழ் வழங்கியுள்ளதையும் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

வலிமை படம் சுமார் 2 மணிநேரம் 58 நிமிடம், 35 வினாடிகள் ஓடும் வகையில் உருவாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதையும் பிறக்க இருக்கும் புத்தாண்டோடு அஜித் ரசிகர்கள் அதகளப்படுத்தி வருகின்றனர்.

வலிமை படம் இந்தியாவில் தயாரான படங்களின் மோஷன் போஸ்டர்களில் அதிக அளவிலான லைக்குகளைப் பெற்றது ‘வலிமை’ படம்தான். இந்தப் படத்தின் மோஷன் போஸ்டரை ஜீ ஸ்டுடியோஸ், பே வியூ ப்ராஜக்ட்ஸ் மற்றும் சோனி மியூசிக் சவுத் உள்ளிட்ட யூடியூப் சேனல்களில் ஒரே சமயத்தில் படக்குழு வெளியிட்டுள்ளது.