இசைஞானி இளையராஜா மற்றும் யுவன்சங்கர் ராஜா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள மாமனிதன் திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.

சீனு ராமசாமி இயக்க விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் இந்தப் படத்தில் காயத்திரி, குரு சோமசுந்தரம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

விஜய் சேதுபதியை வைத்து தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய சீனு ராமசாமி மாமனிதன் படத்திற்காக மீண்டும் கைகோர்த்திருக்கிறார்.

மதங்களைக் கடந்து அனைவரிடமும் அன்பு பாராட்டும் கிராமத்து ஆட்டோ டிரைவராக இந்தப் படத்தில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி.