தெலுங்கானா மாநில போக்குவரத்துக் கழக பேருந்துகளை விமர்சித்து ராபிடோ பைக் பயண செயலி வெளியிட்ட விளம்பரத்துக்கு ஹைதராபாத் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இந்த விளம்பரத்தில் பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்திருந்தார்.

விளம்பரத்தில் மாநில போக்குவரத்துக் கழக பேருந்துகளை தரக்குறைவாக விளம்பரப்படுத்திய நிறுவனத்திற்கு எதிராக நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அதன் பிறகு, அதிலிருந்த சில காட்சிகளை நீக்கிய ராபிடோ விளம்பரத்தில் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்தை குறிப்பிடும்படியான காட்சிகளை புகுத்தியிருந்தது.

இதனால் நீதிமன்றத்தில் முறையிட்ட அம்மாநில போக்குவரத்துக் கழகத்தின் மனுவை விசாரித்த நீதிபதி சர்ச்சைக்குரிய விளம்பரத்தை யூ-டியூப், கூகுள் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான ஊடகங்களிலும் ஒளிபரப்பத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.