விஜய்சேதுபதி நடித்துள்ள மாமனிதன் பட ஷூட்டிங் நிறைவு: இயக்குனர் சீனு ராமசாமி அறிவிப்பு

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாக இருக்கும் படம், ` மாமனிதன்’. இந்தப் படத்தின் ஷூட்டிங்  நிறைவு பெற்றுள்ளதாக சீனு ராமசாமி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அத்துடன் விஜய் சேதுபதியுடன் படக்குழுவினர் எடுத்த குரூப் புகைப்படத்தையும் பதிவிட்டு உள்ளார்.

சீனு ராமசாமி இயக்கத்தில் அறிமுகமானவர் விஜய்சேதுபதி.  ‘தென்மேற்குப் பருவக்காற்று’ படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி  தொடர்ந்து ‘இடம் பொருள் ஏவல்’, ‘தர்மதுரை’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில் இடம் பொருள் ஏவல் படம் வெளியாகவில்லை. இருந்தாலும், சீனுராமசாமியின் 4வது படமான ‘மாமனிதன்’  படத்தில் நடித்து வந்தார்.

இந்தப் படத்தை, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில், படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக, காயத்ரி நடிக்கிறார். இந்த படத்தில் விஜய்சேதுபதி, ஆட்டோ டிரைவராக நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்துக்கு இளையராஜா – யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இணைந்து இசையமைக்கின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு,  தென்காசி, கேரளா பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக இயக்குனர்  அறிவித்து உள்ளார். விரைவில் டப்பிங் உள்பட மற்ற வேலைகள் நடைபெறும் என்றும் அறிவித்து உள்ளார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Dubbing starts shortly, maamanithan, seenu-ramasamy, Yuavan shankar raja, காய்த்திரி, சீனுராமசாமி, மாமனிதன், யுவன் சங்கர் ராஜா, விஜய்சேதுபதி
-=-