வருத்தம் தெரிவித்த நடிகர் விஜய்சேதுபதி

Must read

சென்னை:
ட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய விஜய் சேதுபதி அதற்காக வருத்தம் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி இன்று தனது 43-ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில் விஜய் சேதுபதி தனது பிறந்தநாளுக்கு பட்டாக் கத்தியால் கேக் வெட்டிய புகைப்படம் பரவி சமூகவலைதளங்களில் விவாதத்தை கிளப்பியது.

இந்நிலையில், பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய விஜய் சேதுபதி அதற்காக வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வருத்தம் தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது பொன்ராம் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிப்பதாகவும், அந்தப் படத்தின் கதைப்படி ஒரு பட்டாக் கத்தி முக்கிய கதாபாத்திரமாக இருக்கும். ஆகையால், அந்தப் படக்குழுவினருடன் பிறந்த நாள் கொண்டாடும்போது அதே பட்டாக் கத்தியை வைத்து கேக்கினை வெட்டினேன் என்றும், இது ஒரு தவறான முன்னுதாரணம் என்று பலரும் கருத்து தெரிவித்து விவாதமாகி உள்ளது என்றும் கூறியுள்ளார்.

More articles

Latest article