சேதுபதி வெற்றிப்படத்தை இயக்கிய  அருண்குமார்  இயக்கத்தில் விஜய் சேதுபதி மீண்டும் இணைந்துள்ள   ’சிந்துபாத்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு உள்ளது.

ஏற்கனவே  ’பண்ணையாரும் பத்மினியும்’, ’சேதுபதி’ என 2 படங்களை இயக்கிய இயக்குனர் அருண்குமார் உடன் 3வது படத்தில் விஜய்சேதுபதி இணைந்துள்ளார். இந்த படத்திற்கு சிந்துபாத் என பெயரிடப்பட்டுள்ளது.

கிராமிய பின்னணியைக் கொண்டதாக இந்த படம் தயாரிக்கப்பட இருப்பதாக கூறியுள்ள இயக்குனர், படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாக கூறி உள்ளார். மேலும்,  படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ’தர்மதுரை’ படத்துக்கு பிறகு விஜய் சேதுபதி படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் படம் இது.

’சிந்துபாத்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ள நிலையில் விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.