அடுத்தடுத்து மூன்று பெரிய படங்களில் நடிக்கும் விஜய் சேதுபதி..!

Must read

vijaysethupathi
தமிழ்சினிமாவின் பிசியான நாயகனாக மாறிவிட்டார் விஜய்சேதுபதி இவர் நடிப்பில் இந்த ஆண்டு (2016) மட்டும் சேதுபதி’, ‘காதலும் கடந்து போகும்’, ‘இறைவி’, ‘தர்மதுரை’, ‘ஆண்டவன் கட்டளை’ ஆகிய படங்கள் வெளியாகி அனைத்து படங்களும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் இன்னும் ஒரு வாரத்தில் விஜய் சேதுபதியின் றெக்க படமும் வரும் 7ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடதக்கது. தனுஷ் நடிப்பில் வெற்றிமாரன் இயக்கும் வடசென்னை திரைப்படத்திலும் ஒரு கதாபாத்திரம் நடித்துள்ளார்.
இன்று விஜய் சேதுபதியின் மேலும் 3 படங்கள் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. ‘ரேணிகுண்டா’ இயக்குனர் பன்னீர்செலவம் இயக்கத்தில் ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் ஒரு படத்திலும், ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் புஷ்கர் காயத்திரி இயக்கத்தில் ‘விக்ரம் வேதா’ என்ற படத்திலும், ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ பட இயக்குனர் கோகுல் இயக்கவுள்ள படத்திலும் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாகவும், இந்த திரைப்படங்களின் பணிகள் இந்த ஆண்டே நடைபெறவுள்ளதாக கூறப்படுகின்றது.
இதையெல்லாம் பார்க்கும் போது ஒரு பழமொழி நியாபகம் வருகின்றது அது : காற்றுள்ள போதே தூற்றிக் கொள்! என்பது தான்.

More articles

Latest article