‘பிக் பாஸ் வீட்டிற்குள் வர விஜய் சேதுபதி தான் காரணம்’ – சேரன்

Must read

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில்ஒரு போட்டியாளராக இருக்கிறார் சேரன்.

நேற்று நடந்த மொட்ட கடிதாசி டாஸ்க்கில் போட்டியாளர்கள் மற்ற ஹவுஸ்மேட்ஸிடம் நேரடியாக கேட்க முடியாமல் போன கேள்விகளை சீட்டில் எழுதி கேட்கலாம் என்று கூறப்பட்டது.

அதில் திரைத்துறைக்குள் நுழைந்து பல வெற்றிகளையும், பெயரையும், புகழையும் சம்பாதித்த சேரன், எதற்காக பிக் பாஸ் வீட்டிற்குள் வர வேண்டும் என்ற கேள்வியை சரவணன் எழுப்பியிருந்தார்.

‘ஆட்டோகிராஃப்’ படத்திற்கு பிறகு ஒவ்வொன்றும் போராடி தான் நான் சினிமா பயணத்தை ஓட்டினேன். அப்படி இருக்க, நடிகர் விஜய் சேதுபதி தான் என்னை பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போகும்படி கேட்டுக் கொண்டார். ‘பட்டி தொட்டி முதல் வெளிநாடுகள் வரை பல கோடி மக்கள் பார்க்கும் இந்நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் மக்களுடனான தொடர்பை நெருக்கப்படுத்திக் கொள்ள முடியும் என்று சொன்னவர் விஜய் சேதுபதி தான்’ என சேரன் விளக்கம் அளித்தார்.

More articles

Latest article