சென்னை

விஜய் மீண்டும் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

நடிகர்  விஜயின் 65- வது படத்தை இயக்குவோர் பட்டியலில் அரை டஜன் பெயர்கள் இருந்தன.

அவர்களில், ஏ.ஆர்.முருகதாஸ் பெயரை ‘டிக்’ அடித்துள்ளார், விஜய்.

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

இந்த படம், ‘துப்பாக்கி’ படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என்று இயக்குநர் வட்டாரம் தெரிவித்துள்ளது.

அண்மையில் இதன் கதைச் சுருக்கத்தை விஜயிடம் சொல்லி ஓ.கே. வாங்கியுள்ளார், முருகதாஸ்.

’விஜய்- 65’ என்று தற்காலிகமாகப் பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ்

இசையமைக்கிறார்.

விஜய் நடித்து முடித்துள்ள ‘மாஸ்டர்’ படம் அடுத்த மாதம் 9 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

அதன் பிறகு, விஜய்-முருகதாஸ் கூட்டணியின் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிகிறது.

–  ஏழுமலை வெங்கடேசன்