நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் தளபதி 65. விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் இந்த படத்தில், அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் உள்பட பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இந்த அப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் ஜார்ஜியாவில் நடைபெற்றது. ஜார்ஜிவாவில் படப்பிடிப்பு நடந்த முடிந்த நிலையில், படக்குழுவினர் ஏப்ரல் 24 ஆம் தேதி சென்னை திரும்பினர்.

இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளது. இதற்காக சென்னையில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் வெளிநாட்டில் உள்ள பிரமாண்டமான மால் ஒன்றின் செட் போடும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ்பாதிப்பு மிக வேகமாக அதிகரித்து வரும் நிலையில் செட் போடும் பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் இந்த பணியை உடனடியாக நிறுத்தும்படி விஜய் அறிவுறுத்தியதாக தெரிகிறது.

இதனை தொடர்ந்து பணிகள் உடனடியாக நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.