கார்த்தியின் ‘சர்தார்’ படத்துக்காக சென்னையில் ரூ.2 கோடியில் பிரம்மாண்ட அரங்கு….!

Must read

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் சர்தார் படத்துக்கும் சென்னையில் 2 கோடி செலவில் பிரமாண்ட அரங்கு அமைத்துள்ளனர்.

சர்தார் படத்தில் கார்த்தி இரு வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் என இரு நாயகிகள். ஆக்ஷன் படமான இதற்கு சென்னையில் பிரமாண்ட அரங்கு அமைத்துள்ளனர்.

கார்த்தியின் 22-வது படமாக உருவாகும் இத்திரைப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, ஜார்ஜ் ஒளிப்பதி செய்கிறார். ஆண்டனி எல்.ரூபன் எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார்.

இந்நிலையில் கொரோனா அலை கைமீறிப்போய், ஊரடங்கும் அறிவித்துள்ளதால், படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். மே 24-க்குப் பிறகு அரசு ஊரடங்கை தளர்த்தினால், அரங்கில் படப்பிடிப்பை தொடர்வது என முடிவு செய்துள்ளனர்.

 

More articles

Latest article