கொரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு அமலில் உள்ளது . இதனால் மக்களின் வாழ்வாதாரம் முடங்கி போயுள்ளது .
பசியால் வாடும் மக்களுக்காக பல்வேறு வகையில் மாநில அரசுகள், அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள் எனப் பலரும்உதவிகள் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் நடிகர் விஜய் ஆண்டனி தனது சம்பளத்தில் 25 சதவீதத்தைக் குறைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் இயல்பு நிலை திரும்பி மீண்டும் படப்பிடிப்பு தொடங்க இன்னும் சில மாதங்கள் ஆகலாம் என்ற நிலையில் விஜய் ஆண்டனி தாமாகவே முன்வந்து தான் ஒப்புக்கொண்ட சம்பளத்தில் 25 சதவீதத்தைக் குறைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
விஜய் ஆண்டனியின் இந்த அறிவிப்பு குறித்து அம்மா கிரியேஷன்ஸ் நிறுவனத் தயாரிப்பாளர் டி.சிவா அவரைப் போலவே அனைத்து நடிகர்களும் தொழில்நுட்பக் கலைஞர்களும் தங்களின் சம்பளத்தில் ஒரு பகுதியையே தாமாகவே முன்வந்து விட்டுக் கொடுத்து அனைத்துத் தயாரிப்பாளர்களையும் இந்த இக்கட்டான நேரத்தில் காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.