இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், எடிட்டர், பாடகர் எனப் பல துறைகளில் பணிபுரிந்து வருபவர் விஜய் ஆண்டனி.

விஜய் ஆண்டனி புதிய படமொன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தை ‘விடியும் முன்’ படத்தின் இயக்குநர் பாலாஜி குமார் இயக்கி வருகிறார்.

இதில் விஜய் ஆண்டனிக்கு நாயகியாக ரித்திகா சிங் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

பாலாஜி குமாரின் படத்தை முடித்துவிட்டுத்தான், ‘பிச்சைக்காரன் 2’ படத்தைத் தொடங்கவுள்ளார் விஜய் ஆண்டனி. இதனை ‘கோடியில் ஒருவன்’ இயக்குநர் ஆனந்த் கிருஷ்ணன் இயக்கவுள்ளார்.