‘பிகில்’ படத்தைத் தொடர்ந்து, இந்தியில் உருவாகவுள்ள புதிய படத்தை இயக்கவுள்ளார் அட்லி. பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்தப் படத்தைத் தயாரித்து, நாயகனாக நடிக்கவுள்ளார் ஷாரூக்கான்.

அவரோடு இணைந்து கரண் ஜோஹரும் இந்தப் படத்தைத் தயாரிப்பார் எனத் தெரிகிறது.

இதன் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்குகிறது. ஷாரூக்கான் உடன் நடிக்கவுள்ளவர்களை இறுதி செய்து, ஒப்பந்தம் செய்யும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. விரைவில் அட்லி – ஷாரூக்கான் கூட்டணி படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.