விஜய் ஆண்டனி நடிப்பில் , சசி இயக்கத்தில் மெகா வெற்றி பெற்ற திரைப்படம் பிச்சைக்காரன்.

பிச்சைக்காரன் தெலுங்கிலும் டப் செய்து வெளியிடப்பட்டது. தமிழைவிட தெலுங்கில் படத்துக்கு அமோக வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

விஜய் ஆண்டனியே படத்தை தயாரித்து, இயக்கி, நடிக்கிறார். பிச்சைக்காரன் தெலுங்கில் வெற்றி பெற்றதால் அதன் இரண்டாம் பாகத்தை தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் தயாரிக்கின்றனர்.

‘பிச்சைக்காரன் 2’ படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமாகவுள்ளார் விஜய் ஆண்டனி. இன்னும் படப்பிடிப்பு தொடங்கப்படாத இந்தப் படத்தை இப்போதே ‘BLOCKBUSTER 2022’ என்று படக்குழு போஸ்டரில் குறிப்பிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டுள்ளார்.