விஜய் நடித்த வாரிசு மற்றும் அஜித் நடித்த துணிவு ஆகிய இரண்டு படங்களும் ஜனவரி 11 ம் தேதி ஒரேநாளில் ரிலீசானது.

இரண்டு நடிகர்களின் ரசிகர்களுக்கும் இது குதூகலமான பொங்கலாக மாறியது.

தவிர ‘வாரிசு’, ‘துணிவு’ இரண்டு படங்களும் போட்டிபோட்டு வசூலை வாரிக் குவித்து வருகிறது.

இந்த நிலையில், விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 67 மற்றும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்க இருக்கும் ஏ.கே. 62 ஆகிய இரண்டு படங்களும் மீண்டும் திரையரங்குகளில் மோத இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அடுத்ததாக உருவாகி வரும் இந்த இரண்டு படங்களும் 2023 தீபாவளி அன்று ஒரே நேரத்தில் வெளியாகும் என்று கூறப்படுவதை அடுத்து ரசிகர்கள் மேலும் உற்சாகமடைந்துள்ளனர்.