அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வரும் தனுஷ் அடுத்ததாக தனது 50-வது படத்திற்கு சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் கைகோர்த்திருக்கிறார்.

தமிழ், இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் என்று பல மொழி திரைப்படங்களில் சுழன்று வரும் தனுஷின் #D50 குறித்த அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

ரஜினி நடிப்பில் நெல்சன் திலிப்குமார் இயக்கி வரும் ஜெயிலர் படத்தின் பெரும்பான்மையான படப்பிடிப்பு முடிவடைந்ததை அடுத்து தனது அடுத்தடுத்த தயாரிப்புகளில் தீவிரம் காட்டி வருகிறது சன் பிக்சர்ஸ்.

ஜெயிலர் படத்தை ஆகஸ்ட் மாதம் திரையிட திட்டமிட்டிருக்கும் இந்த தயாரிப்பு நிறுவனம். #D50 படத்திற்கான இயக்குனர் மற்றும் இதர நடிகர்கள் நடிகைகள் உள்ளிட்ட விவரங்களை விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.