அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வஸந்த் ரவி, ரவீனா, பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ராக்கி. இந்தப் படத்தின் ட்ரெய்லருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை விக்னேஷ் சிவன் – நயன்தாரா ஜோடி கைப்பற்றியது. விக்னேஷ் சிவன் – அருண் மாதேஸ்வரன் இருவரும் உதவி இயக்குநர்களாகப் பணிபுரிந்த காலத்திலிருந்தே நெருங்கிய நண்பர்கள்.

இதனிடையே ராக்கி படத்தின் புதிய டீஸர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. ஆதி முரண் புதிர் எனும் இந்த டீஸர் தொகுப்பை இயக்குனர் கெளதம் மேனன் வெளியிட்டார்.

இந்நிலையில் இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவிய ஒரு MEMEக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் பதில் அளித்துள்ளார். ராக்கி திரைப்படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்டை கேட்கும் விதமாக வடிவேலுவின் புகைப்படம் இருக்கும் அந்த MEME-ஐ இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோர்ஸில் பகிர்ந்து “தியேட்டர் ஓபன் பண்ண உடனே” என பதிலளித்துள்ளார்.

இயக்குனர் விக்னேஷ் சிவனின் இந்த அறிவிப்பு தற்போது ராக்கி திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.