நானும் ரவுடிதான் படத்தை இயக்கினார் விக்னேஷ் சிவன். அதில் நயன்தாரா ஹீரோயினாக நடித்தார். அப்போது முதல் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் காதலித்து வருகின்றனர். இருவரும் அடிக்கடி வெளிநாடு சென்று காதல் வாழ்கையை அனுபவித்து வருகின் றனர். அந்த படங்களை அவ்வப்போது விகேனேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வந்தார்.


கொரோ னாவுக்கு முன்பாக இருவரும் நியூயார்க் நகருக்கு சென்றுவந்தனர். காபி ஷாப் ஒன்றில் இருவரும் அமர்ந்திருக்கும் புகைப் படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன் ’பயணக்கள் சென்று அதிக காலமாகிவிட்டது. எல்லாம் இந்த கொரோனா தடையால்தான், கோரோனாவே போ, கொரோனாவே ஒடிப்போய்விடு, நியூயார்க் சிட்டியை மறக்கமுடியமா?’ ’அடுத்து ஊர் சுற்ற எப்போது தயார் ஆவது’ என நயன்தாரா உடன் ஊர் சுற்ற மனதுக்குள் இருக்கும் ஆசையை வெளிப்படுத்தி உள்ளார்.
விஜய்சேதுபதியுடன், நயன்தாரா நடிக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தை அடுத்து இயக்குகிறார் விகேஷ் சிவன்.