விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விரைவில் எம்.எஸ்.தோனி

Must read

சென்னை:
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விரைவில் எம்.எஸ்.தோனி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிம்பு நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான போடா போடி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து விஜய் சேதுபதியுடன் இணைந்து நானும் ரவுடி தான் படத்தை இயக்கினார் விக்கி. இப்படம் அவரது வாழ்வில் மறக்கமுடியாத படமாக மாறியது.

ஏனெனில் இப்படம் மூலம் தான் அவருக்கும், நயன்தாராவுக்கும் (Nayanthara) இடையே காதல் துளிர்விட்டது. இன்றுவரை இந்த காதல் தொடர்ந்து வருகிறது. இவர்களது காதல் சக்சஸ் ஆனது போல் படமும் வெற்றிவாகை சூடியது. இதையடுத்து சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம் என்கிற படத்தை இயக்கினார் விக்னேஷ் சிவன். இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இதையடுத்து மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்த விக்னேஷ் சிவன், அவரை வைத்து காத்துவாக்குல ரெண்டு காதல் என்கிற படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தில் நயன்தாராவும், சமந்தாவும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சினிமாவில் பிசியாக இயங்கி வரும் விக்னேஷ் சிவன், தீவிரமான கிரிக்கெட் ரசிகர். குறிப்பாக இவர் எம்.எஸ்.தோனியின் வெறித்தனமான ரசிகர். இவர் ஏற்கனவே தோனியை சந்தித்து புகைப்படம் எடுத்திருந்தாலும், அண்மையில் அவரை சந்தித்ததும், அவருடன் எடுத்த புகைப்படமும் ரொம்ப ஸ்பெஷலாம். ஏனெனில், தோனியிடம் ஒரு கதையை சொல்லி ஓகே வாங்கிவிட்டாராம் விக்கி. விரைவில் தனது இயக்கத்தில் தோனி நடிக்க உள்ளதையும் அவர் உறுதிப்படுத்தி உள்ளார்.

ஏற்கனவே அதர்வா எனும் படத்தில் நடிக்க தோனி கமிட் ஆகி உள்ளார். தற்போது விக்னேஷ் சிவனின் கதைக்கும் ஓகே சொல்லி உள்ளதால் இந்த கூட்டணிக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் தோனியிடம் பூங்கொத்து கொடுத்தபடி விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரல் ஆகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More articles

Latest article