செங்கல்பட்டு: 
முதலை வந்ததாகப் பரவும் காணொளி உண்மையல்ல என்று செங்கல்பட்டு ஆட்சியர் ராகுல் நாத் விளக்கம் அளித்துள்ளார்.
செங்கல்பட்டு அருகே உள்ள கூடுவாஞ்சேரி பகுதியில் முதலை வந்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. காணொளி ஒன்றும், புகைப்படம் ஒன்றும் பலரால் பகிரப்பட்டு வருகிறது. பலரும் அது குறித்துப் பேசி இருந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்ட  ஆட்சியர்  ராகுல் நாத் முதலை காணொளி குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், கூடுவாஞ்சேரியில் சாலையில் முதலை வந்ததாக வெளியான காணொளி தவறானது. சாலையில் தண்ணீர் போகும் கால்வாயில் சுழற்சி காரணமாக மரக்கட்டை ஒன்று மிதந்தை முதலை எனச் சிலர் வதந்தி பரப்பி வருகின்றனர் என்றார்.
[youtube-feed feed=1]