சென்னை:
3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் வாங்கியது சந்தர்ப்பவாதம் என்று கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார்.
வேலூரில் மக்கள் விழிப்புணர்வு பிரச்சார பயணத்தில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் வாங்கியது சந்தர்ப்பவாதம் எனக் குற்றம்சாட்டினார்.
வட மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் சந்தித்த தோல்வியினால், வேளாண் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் வாங்கியிருப்பதாகவும் கே.எஸ். அழகிரி தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “திமுக கூட்டணியில் குறைந்த இடங்களே ஒதுக்குகிறார்கள். இது வருந்தத்தக்க விஷயம். இதற்குப் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காணப்படும்” எனக் கூறினார்.