தொப்பூர் விபத்து எவ்வாறு ஏற்பட்டது? : புதிய வீடியோ

Must read

ர்மபுரி

ர்மபுரி மாவட்டத்தில் தொப்பூரில் நடந்த லாரி விபத்து ஏற்பட்டபோது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

இன்று காலை தர்மபுரியில் இருந்து இரும்பு பாரம் ஏற்றிய லாரி ஒன்று தொப்பூர் மலைப்பாதை வழியாக சேலம் சென்றது. அப்போது சோளத்தட்டை ஏற்றி வந்த சரக்கு வாகனம் லாரி பின்னால் மோதியதால் அப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டது.

அந்த சாலை இறக்கமானது என்பதால் விபத்தில் சிக்கிய வாகனம் மீது பின்னால் வந்து கொண்டிருந்த, 12 வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின.   அந்த சமயத்தில் ஆந்திராவில் இருந்த சிமென்ட் ஏற்றி வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து மோதிநின்ற வாகனங்கள் மீது மோதியது.

இந்த விபத்தில் 4 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மீட்புப் பணிகளை முடுக்கி விட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடும் பாதிப்பு அடைந்தது.

இந்த விபத்து ஏற்படும் போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வெளியாகி சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.  நமது வாசகர்களுக்காக இதோ அந்த வீடியோ :

[youtube https://www.youtube.com/watch?v=ZgNPfoDUjWg]

More articles

Latest article