டெல்லி:

உ.பி.யில் பாஜ.வுக்கு கிடைத்த அமோக வெற்றி அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அங்கிகாரம் என்று ஆர்எஸ்எஸ் தெரிவித்துள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை தொடர்ந்து உ.பி. பாஜ அரசு கலைக்கப்பட்டது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டியே தீருவோம் என ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகள் தொடர்ந்து கூறி வந்தனர்.

இந்நிலையில் 15 ஆண்டுகள் கழித்து உ.பி.யில் பாஜக தற்போது அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவுள்ளது. ஆட்சி அமைப்பதற்கு முதல்வர் யார்? என்பது கூட அக்கட்சியில் இன்னும் முடிவாகவில்லை. ஆனால், அதற்குள் ராமர் கோஷத்தை ஆர்எஸ்எஸ் எழுப்ப தொடங்கிவிட்டது.

உ.பி.யில் பாஜ பெற்ற வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக மக்கள் வாக்களித்துள்ளனர் என்று ஆர்எஸ்எஸ் சிந்தனையாளர் எம்ஜி வைத்யா தெரிவித்துள்ளார். ஆர்எஸ்எஸ்.ன் இந்த அறிவிப்பால் உ.பி.யில் மீண்டும் பதட்டம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.