த்திய பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பில் இருந்து மனோகர் பாரிக்கர் விலகயுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன..  அவர் கோவா மாநில முதல்வர் ஆகிறார்.

சமீபத்தில் கோவா உட்பட ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 21 இடங்களில் வெற்றி பெறும் கட்சி ஆட்சி அமைக்கும்.

ஆனால் எந்த கட்சிக்கும் அறுதிப்பெறும்பான்மை கிடைக்கவில்லை.  காங்கிரஸ் கட்சி அதிகமான இடங்களில் அதாவது 18 இடங்களில் வெற்றி பெற்றது.

அதற்கு  அடுத்த இடத்தை பாஜக ( 14 இடங்கள் ) பெற்றது. அக்கட்சியைச் சேர்ந்த முதல்வர் உட்பட பல அமைச்சர்கள் தோல்வியைத் தழுவினர்.

இந்த நிலையில், கோவா முன்னாள் முதல்வரும், தற்போதைய மத்திய அமைச்சருமான பாரிக்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அவர் கோவா முதல்வராக பதவியேற்க உள்ளார். அவருக்கு பாஜகவைச் சேர்ந்த  14 எம்.எல்.ஏக்களுடந்,  எம்.ஜி.பி கட்சி உறுப்பினர்கள் 3 பேரும், கோவா பார்வர்ட் பார்ட்டி உறுப்பினர்கள் 3 பேரும், சுயேட்சைகள் 3 பேரும் ஆதரவு அளித்துள்ளனர்.

அவர் இன்னும் சிறிது நேரத்தில் கோவா ஆளுநர் மிருதுளா சின்ஹாசை சந்திக்க இருக்கிறார்.

ஆகவே கோவாவில் பாரிக்கர் தலைமையில் பாஜக ஆட்சி அமைவது உறுதியாகி உள்ளது.