உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களின் புதிய முதலமைச்சர்களைத் தேர்வு செய்வதற்காக பா.ஜ.க. ஆட்சி மன்றக் குழு இன்று கூடுகிறது.

இரு மாநிலங்களிலும் முதலமைச்சர் வேட்பாளர்களை அறிவிக்காமலேயே அந்தக் கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்நிலையில், பா.ஜ.க. தலைவர் அமீத்ஷா தலைமையில் டில்லியில் இன்று அக்கட்சியின் ஆட்சி மன்றக் குழுக் கூட்டம் நடைபெறுகிறது. இதில், பிரதமர் மோடி மற்றும் குழுவின் உறுப்பினர்கள் பங்கேற்கிறார்கள்.

உத்தரப் பிரதேச முதல்வர் பதவிக்கு யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர்கள் மகேஷ் சர்மா, மனோஜ் சின்ஹா ஆகியோரின் பெயர்கள் அடிபடுகின்றன.
உத்தரகாண்ட் மாநிலத்தைப் பொறுத்தவரை பா.ஜ.க. மூத்த தலைவர்கள் சத்பால் மகராஜ், திரிவேந்திர சிங் ராவத் ஆகியோரில் ஒருவர் தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது