திருவனந்தபுரம்:

கேரளாவில் லவ் ஜிகாத் நடப்பது உண்மை என்றால் எங்களுக்கு நீதி வேண்டும். இந்த உண்மையை வெளிக் கொண்டு வரத்தான் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம் என்று நிமிஷா என்கிற பாத்திமாவின் தாய் பிந்து சம்பத் தெரிவித்தார்.

கேரளாவில் இருந்து மாயமாகி ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் இணைந்த பலரில் நிமிஷாவும் ஒருவர். பிந்து, ஹாதியா (அகிலா) தந்தை அசோகன் உள்ளிட்ட சிலர் லவ் ஜிகாத்தால் பாதிக்கப்பட்ட பெற்றோரை ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஹாதியா சுதந்திரமாக செயல்படவும், சுயமான முடிவெடுக்கவும் கேரளா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கலப்பு திருமணங்களை லவ் ஜிகாத் என்று பெற்றோர் கூறியதை நீதிமன்றம் ஏற்க மறுத்து பெற்றோர்களையும் எச்சரித்துள்ளது.

2016ம் ஆண்டில் நிமிஷா இஸ்லாமிய வாலிபரை காதலித்த பின்னர் இஸ்லாமிய மதத்தால் ஈர்க்கப்பட்டார். இந்த காதல் பிரிந்ததை தொடர்ந்து இஸ்லாமியராக மதம் மாறிய பாலக்காட்டை சேர்ந்த ஒருவரைதிருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இந்த தம்பதியர் மாயமாகிவிட்டனர்.

இது குறித்து பிந்து கூறுகையில், ‘‘எனது மகள் மாயமாகி 2 ஆண்டு முடிந்துவிட்டது. அவர் எங்கே இரு க்கிறார் என்று தெரியவில்லை. போன் மூலமும் பேசவில்லை. குறுந்தகவலும் அனுப்பவில்லை. அரசும், புலனாய்வு அமைப்பும் இதுவரை என்னதான் கண்டுபிடித்தார்கள் என்று தெரியவில்லை. ஒன்றுமே கண் டுபிடிக்கவில்லை. எனது மகளை திரும்ப அழைத்து வர இந்த அரசு தலையிடவில்லை.

நான் ஒருவர் மட்டும் இங்கே பாதிக்கவில்லை. சாதாரண மக்களுக்கு நடந்திருப்பதால் அரசுக்கு அக்கறை இல்லை. அதிகாரவர்க்க குடும்பத்தினரை சேர்ந்த மகள்களை மதம் மாற்றி அழைத்து சென்றிருந்தால் இ ந்நேரம் நடவடிக்கை வேறு விதத்தில் இருந்திருக்கும்’’ என்றார்.

அவர் மேலும் கூறுகையில், ‘‘என்னை போல் பல பெற்றோர் கேரளாவில் பாதித்துள்ளனர். லவ் ஜிகாத்துக்கு தங்களது மகள்கறை பறிகொடுத்துள்ளனர். இதன் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால் என்ன செய்வதென்று தெரியவில்லை. நாங்கள் விளம்பரம் தேடவில்லை. ஆனால் நீதி வேண்டும். இதற்காக பெற்றோர்களை ஒருங்கிணைத்து கூட்டமைப்பை ஏற்படுத்துவது தவறில்லை. இந்த முடிவு காலதாமதமாக எ டுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

இது போன்ற சம்பவங்களில் ஹாதியா விஷயம் மட்டுமே தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றது. ஹாதியா இஸ்லாமுக்கு மதமாற்றம் செய்யப்பட்டு சாபின் ஜகான் என்ற இஸ்லாமியரை திருமணம் செய்து கொண்டார். அவரது பெற்றோர் இந்த விவகாரத்தை நீதிமன்றம் கொண்டு சென்றனர். மதமாற்றம் மற்றும் திருமணத்திற்கு பின்னால் மிகப்பெரிய சதி இருக்கிறது என்றனர்.

இவர்களின் திருமணத்தை கேரளா உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. இதை எதிர்த்து ஹாதியா உ ச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இதன் பின்னர் 25 வயது ஹாதியா சேலம் கல்லூரியில் பயில உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. அவரது திருமண முடிவில் யாரும் தலையிட முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஹாதியா தந்தை அசோகன் கூறுகையில், ‘‘இந்த விவகாரம் நீதித்துறைக்கு கட்டுப்பட்டது என்றும், புலனாய்வு அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன என்பதை ஏற்றுக் கொள்கிறேன். எனினும் இது போன்ற ஒரு கூட்டமைப்பு அவசியமானது. இது எனது சொந்த பிரச்னை கிடையாது. இது போல் பல பெற்றோர் தங்களது மகள்களை இழந்துள்ளனர்’’ என்றார்.

இந்த கூட்டமைப்பில் அதிக உறுப்பினர்கள் இணைந்த பின்னர் அதிகாரப்பூர்வ கூட்டமும், தொடக்க நிகழ்ச்சியும் விரைவில் நடக்கவுள்ளது. இந்த குழு அமைப்பது குறித்து விமர்சகர் தேவிகா கூறுகையில், ‘‘ மக்கள் ஒரு விஷயத்தை நம்பும் போது இது போன்ற கூட்டமைப்பு ஏற்படுத்தப்படுவது வழக்கம்.

இந்த விஷயத்தில் மக்கள் லவ் ஜிகாத் உண்மை என்று முழுமையாக நம்புகின்றனர். இதற்காக தங்களது மகள்கள் கடத்தப்பட்டு திருமணம் செய்யப்பட்டதாக அவர்கள் கருதுவதால் கூட்டமைப்பு அமைக்கப்படுகிறது என்றார்.