சென்னை: வேப்பேரியில் அமைந்துள்ள தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழக வளாகத்தில் இன்று  கவர்னர் ரவி தலைமையில் கால்நடை பல்கலை. பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவை  தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணித்துள்ளார்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக 23-ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழா சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இன்று, காலை 9.45 மணி அளவில் தொடங்கியது.

இந்த விழாவில், பல்கலைக்கழக வேந்தரான : ஆளுநா் ஆா்.என்.ரவி உள்பட பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். ஆனால், இந்த பட்டமளிப்பு விழாவை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்  புறக்கணித்தார்.

இந்த  பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற நிலையில்,   பட்டமளிப்பு விழாவில் 1,166 பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்க உள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டங்களை வழங்கி வாழ்த்தி பேசினார்.

[youtube-feed feed=1]