சென்னை: போதை பொருள் கடத்தல் மன்னானன திமுகவைச் சேர்ந்த முன்னாள் பிரமுகர் ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவருடைய முக்கிய கூட்டாளி ஒருவரும் கைது செய்யப்பட்டு உள்ளதாக போதை பொருள் கடத்தல் தடுப்புதுறை அறிவித்து உள்ளது. அதன்படி,
ஜாபர் சாதிக் கூட்டாளி  சதா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த சென்னையைச் சேர்ந்த ஜாஃபர் சாதிக் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் வைத்து கைது செய்யப்பட்டார். மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அவரை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவல்களைக் கொண்டு விசாரணையை மைலும் விரிவாக்கம் செய்துள்ளது தேசிய போதை பொருள் தடுப்பு துறை. மேலும் அமலாச்சத்துறை, தேசிய புலனாய்வு துறை என பல துறையினரும் வழக்குகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டெல்லியில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு தலைமை அலுவலகத்தில் ஜாஃபர் சாதிக்  அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இதற்கிடையில் ஜாபர் சாதிக்கை விரைவில் காவலில் எடுத்து விசாரிக்கவும் அமலாக்கத் துறையினர் திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் கூட்டாளி சதா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜாபர் சாதிக் கூட்டாளி சதாவை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளது.

இதற்கிடையில், ஜாஃபர் சாதிக்கை காணவில்லை என ஆன்லைன் வாயிலாக அவரது வழக்கறிஞர் பிரபாகரன் தமிழ்நாடு காவல்துறையில் புகார் அளித்துள்ளார். கைது செய்யப்பட்ட 4வது சந்தேக நபரான சாந்தோம் பகுதியைச் சேர்ந்த ஜாபர் சாதிக் அப்துல் ரஹ்மான் என்ற பெசோஸ், 35, என்பவரின் வழக்கறிஞர் டி.ஆர்.பிரபாகரன், தனது கட்சிக்காரரை காணவில்லை அவரைக் கண்டுபிடித்து தரும்படி காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.