சேலம்

பிரபல தமிழ் எழுத்தாளர் மகரிஷி நேற்றிரவு மரணம் அடைந்தார்

பிரபல தமிழ் எழுத்தாளர் மகரிஷியின் உண்மைப்பெயர் பாலசுப்ரமணியன் என்பதாகும்.   இவர் தஞ்சையில் பிறந்தவர் ஆவார்.  இவர் சேலத்தில் வெகு நாட்களாக வசித்து வருகிறார்.   இவர் தமிழக மின்வாரியத்தில் பணிந்து ஓய்வு பெற்றவர் ஆவார்.   தனது எழுத்துப் பணிக்கு இடையூறு வரக்கூடாது என்பதால் பதவி உயர்வுகளைத் தவிர்த்து வந்தார்.

மகரிஷி என்னும் புனைப்பெயரில் இவர் சுமார் 150 புதினங்கள், 5 சிறுகதைத் தொகுப்புக்கள் மற்றும் 60 கட்டுரை நூல்களை எழுதி உள்ளார்.    இவருடைய முதல் புதினமான பனிமலை கடந்த 1965 ஆம் வருடம் என்னதான் முடிவு என்ற பெயரில் திரைப்படம் ஆகியது.

அதைத் தொடர்ந்து, பத்ரகாளி,  புவனா ரு கேள்விக்குறி, வட்டத்துக்குள் சதுரம், சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு, நதியைத் தேடி வந்த கடல் ஆகிய புதினங்களும்  திரைப்படமாகி உள்ளன.

இவருடைய கதைகள் பெரும்பாலும் பெண் கதாபாத்திரங்களின் அடிப்படையில் எழுதப்பட்டிருக்கும்.   வயது மூப்பு காரணமாக நேற்றிரவு மகரிஷி மரணம் அடைந்தார்.   அவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.