இன்று மகாளய அமாவாசை – சிறப்பு தர்ப்பண தினம்

பொதுவாகவே அமாவாசை தினம் என்றாலே முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுக்க மிக உகந்த உன்னதமான நாள் என்பது அனைவரும் அறிந்ததே. அதுவும் அமாவாசை தினம் சனிக்கிழமைகளில் வந்தால் விசேஷமாகப் கருதப்படுகின்றது.   முன்னோர்களின் ஆசி பெற நாம் அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டிய முக்கிய நாள் தான் இந்த மகாளய அமாவாசை ஆகும்.

குறிப்பாக மகாளய அமாவாசை முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க மிகச் சிறப்பான நாளாகும். இந்த வருடம் சனிக்கிழமையில் அமைந்து சனி மகாளய அமாவாசையாக சிறப்பாக உள்ளது. இந்த நாளில் நாம் செய்ய வேண்டிய முக்கிய விஷயங்கள் என்ன என்பதைப் பார்ப்போம்

15 தினங்கள் கொண்ட மகாளய பட்சம் எனும் இந்த புண்ணிய தினங்களின் இறுதியில் வருவது மகாளய அமாவாசை. (பட்சம் என்பது 15 நாட்கள் கொண்ட கால அளவை குறிப்பதாகும்.  இந்த மகாளய பட்சம் என்பது ஆவணி மாதம் பெளர்ணமிக்கு பின்னர் வரும் 15 நாட்களைக் குறிப்பதாகும்.)

மகாளய அமாவாசை நாளில் நம் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுப்பத னால் அவர்களின் ஆசி நமக்கு கிடைத்து வாழ்க்கை வளம்பெறும்.    அது மட்டுமின்றி  ஒரு திறந்த வெளியில் தெற்கு திசை பார்த்து ஒரு விளக்கு அல்லது தீபத்தை பார்த்து வணங்குவது மிகவும் நல்லது. உங்களின் முன்னோர்களை நினைத்து வழிபடுவதும், கடவுளிடம் பிரார்த்திப்பதும் உங்களுக்கு மன நிம்மதியையும், ஆசீர்வாதமும் கிடைக்கும்.

மகாளய அமாவாசை தினத்தில் என்ன விஷயங்கள் செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு செய்தால், அந்த நாள் சிறப்பாக அமைவதோடு, நம் முன்னோர்களின் ஆசி மற்றும் இறைவனின் ஆசி கிட்டுவது நிச்சயம். மிகவும் புண்ணிய  தினமான மகாளய அமாவாசை தினத்தில் நற்காரியங்களை செய்து இறைவனின் அருளும், முன்னோர்களின் அருளும் பெற்று வாழ்வாங்கு வாழ பத்திரிகை.காம் சார்பில் வாழ்த்துகிறோம்.

[youtube https://www.youtube.com/watch?v=b03lVBPNz0Y?feature=youtu]