சென்னை

சுபஸ்ரீ என்னும் இளம்பெண் பேனரால் மரணம் அடைந்ததையொட்டி மேலும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை நகரில் ஒரு திருமண நிகழ்வுக்காக வைக்கப்பட்ட பேனர் மேலே விழுந்ததால் பின்னால் வந்த தண்ணீர் லாரி ஏறி சுபஸ்ரீ என்னும் இளம்பெண் மரணம் அடைந்தார்.   சுபஸ்ரீயின் மரணம்  தமிழகம் எங்கும்  பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது.    சுபஸ்ரீயின் மரணத்துக்கு காரணமான பேனர்களை வைத்த அதிமுக முன்னாள் நகராட்சி உறுப்பினர் ஜெயகோபால் மீது வழக்கு பதியப்பட்டது.

அதையொட்டி ஜெயகோபால் தலைமறைவாகி விட்டார். அவரை விசாரணைக்கு வர வேண்டும் என காவல்துறை சம்மன் அனுப்பியும் அவர் வரவில்லை.   இதனால் அவரைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இவர்களில் ஒரு தனிப்படை நேற்று ஜெயபாலை கைது செய்துள்ளது.

அவரிடம் ஒரு ரகசிய இடத்தில் காவல்துறையினர் நடத்திய விசாரணையின் அடிப்படையில் மேலும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   சாலை நடுவில் பேனர் வைத்து கொடி கட்டிய பழநி, சுப்ரமனி, சங்கர், மற்றும் லட்சுமிகாந்த் ஆகியோரை தனிப்படையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.