திரிணாமுல் காங். எம்.எல்.ஏ தமோனாஷ் கோஷ் கொரோனாவுக்கு பலி… மம்தா பானர்ஜி இரங்கல்…

Must read

கொல்கத்தா:

மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் கட்சியான மம்தாவின்  திரிணாமுல் காங். எம்.எல்.ஏ கொரோனாவால் உயிரிழந்துள்ளார். இதற்கு மேற்கு வங்க முதல்வர் மத்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்து உள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.  மேற்குவங்க மாநிலத்தில் இதுவரை 14,728 பேர் கொரோனாவால்பாதிக்கப்பட்ட நிலையில், 4930 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போதைய நிலையில், 9218 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 580 பேர் பலியாகி உள்ளனர்.

இந்த நிலையில், மேற்கு வங்க மாநில திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ தமோனாஷ் கோஷ் (60வயது)  கொரேனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று காலை உயிரிழந்தார்.

அவரது  மறைவுக்கு முதல்வர் மம்தா பாணர்ஜி இரங்கல் தெரிவித்து டிவிட் பதிவிட்டுஉள்ளார்.

அதில், மிகவும், மிகவும் வருத்தமாக இருக்கிறது. 1998 முதல் ஃபால்டா  தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் 3 முறை வெற்றி பெற்றவரும்,  கட்சி பொருளாளருமான   தமோனாஷ் கோஷ் இன்று எங்களை விட்டு பிரிந்து விட்டார். சமார்  35 ஆண்டுகளுக்கும் மேலாக எங்களுடன் இருந்த அவர், மக்கள் மற்றும் கட்சியின் காரணத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டார். அவர் தனது சமூகப் பணிகளின் மூலம் அதிகம் பங்களித்தார்.

இன்று அவரது இடம் வெற்றிடமாக உள்ளது.அதை நிரப்புவது கடினம். அவரது மறைவுக்கு  நம் அனைவர் சார்பாக, அவரது மனைவி ஜார்னா, அவரது இரண்டு மகள்கள், நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கு மனமார்ந்த இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

பால்டா தொகுதியில் இருந்து 3 முறை சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்ட கோஷ், கட்சியின் பொருளாளராகவும் 1998 முதல் இருந்துள்ளார். மக்களுக்காகவும், கட்சிக்காகவும் உழைத்தவர் என்பதை முதல்வர்  மம்தா பாணர்ஜி நினைவு கூர்ந்துள்ளார்.

More articles

Latest article