துரை

ஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கை தமிழில் நடத்தக் கோரி தொடுத்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நாளை தீர்ப்பு வழங்க உள்ளது.

தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் எனவும் பெருவுடையார் ஆலயம் எனவும் வழங்கப்படும் பெரிய கோவில் குடமுழுக்கு விழாவைத் தமிழில் நடத்த உத்தரவு இட கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது.  இந்த வழக்கை பெ மணியரசன் மற்றும் திருமுருகன் ஆகியோர் தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை தமிழில் வேத மந்திரங்கள் ஓதப்படும் எனப் பிரமாணப் பத்திரம் நேற்று தாக்கல் செய்தது.  அதன் பிறகு நீதிமன்றம் இந்த குடமுழுக்கு தொடர்பான அனைத்து வழக்குகளின் தீர்ப்பையும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது.

தற்போது தஞ்சை பெரிய கோவிலில் தமிழில் குடமுழுக்கு நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கில் நாளைக் காலை தீர்ப்பு வழங்க உள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அறிவித்துள்ளது.