மிக மிக அவசரம் படத்துக்கு பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு பாராட்டு

இயக்குனர் சுரேஷ் காமாட்சி இயக்கத்தில் தயாராகி உள்ள திரைப்படம் மிக மிக அவசரம்.   இந்தப் படத்தில் சீமான் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.  நாயகனாக ஹரிஷ் மற்றும் நாயகியாக ஸ்ரீ பிரியங்கா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தப் படம் சமீபத்தில் பிரபல இயக்குனரான வெங்கட் பிரபுவுக்கு காட்டப்பட்டது.    அவர் இந்தப் படத்தை வெகுவாக பாராட்டி உள்ளார்.   மேலும் இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிந்துள்ளார்.

வெங்கட் பிரபு தனது டிவிட்டர் பக்கத்தில், ”சுரேஷ் காமாட்சி இயக்கிய மிகமிக அவசரம் படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.  அருமையாக எடுத்துள்ளீர்கள் சகோதரரே.   எளிமையான கதையை அருமையாக எடுத்து இருக்கிறீர்கள்.    இரண்டாம் பகுதி..  ஐயோ..   அருமை.   ஆனால் கதையை வெளியில் சொல்லக் கூடாது.   உச்சக்கட்டகாட்சி அருமை.    குழுவினருக்கு வாழ்த்துக்கள்”  எனப் பதிந்துள்ளார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: MIGA MIGA AVASARAM movie, Venkat Prabu praised
-=-