‘தங்கமீன்கள்’ என்ற படத்தை தயாரித்து தேசிய விருது வென்ற இயக்குநர் ராம்,  பேரன்பு என்ற படத்தை தயாரித்து வந்தார்.

இந்த படம் நெதர்லாந்தில் நடைபெற உள்ள சர்வதேச திரைப்படவிழாவுக்கு தேர்வாகி உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பேரன்பு படத்தில் கேரள மெகா ஸ்டாரான  மம்முட்டி நடிக்கிறார். அவருடன்  இணைந்து அஞ்சலி நடிக்கிறார்.  மேலும், சரத்குமார், அஞ்சலி, அஞ்சலி அமீர், சமுத்திரக்கனி, வடிவுக்கரசி, தங்கமீன்கள் படத்தில் சிறுமியாக நடித்த சாதனா, லிவிங்ஸ்டன், சுராஜ், சித்திக், அருள்தாஸ் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் பேரன்பு படம் தயாராகி வருகிறது.

இந்த படம் நெதர்லாந்தில் நடைபெற உள்ள  ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதற்கு தேர்வாகியுள்ளதாக இயக்குநர் ராம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஜீவா நடித்த ‘கற்றது தமிழ்’ படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமான ராம், அடுத்து தரமணி என்ற படத்தையும், தொடர்ந்து பேரன்பு என்ற படத்தையும் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.