புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் ஓராண்டை கடந்த நிலையில், இன்னும்  குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் காவல்துறை திணறி வருகிறது. மேலும், இந்த விஷயத்தில் திமுக அரசு மேம்போக்காக நடந்துகொள்வதாக விமர்சனம் எழுந்துள்ளது. இதையடுத்து, அப்பகுதி கிராம  மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட இருப்பதாக அறிவித்துள்ளனர்.

கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில்  மனிதக் கழிவு கலக்கப்பட்டது தெரிய வந்தது. இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை உருவாக்கியது. இந்த பிரச்சினையானது இரு சமூகங்களுக்கு இடையான பிரச்சினையாக மாறியது. மனிதக் கழிவை கலந்தவர்கள் யாரென விரைவாக கண்டறிய வேண்டும் என வலியுறுத்தி வேங்கைவயல் மற்றும்

இதுதொடர்பாக,  காவல்துறையினர், சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் நேரடி சாட்சி யாரும் இல்லாததால் அறிவியல் ரீதியான தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி விசாரணை நடைபெற்று வருகிறது.  இறையூர் மக்கள் தனித்தனியாக போராட்டங்களிலும் ஈடுபட்டிருந்தனர்.

மனித கழிவு மாதிரியிலிருந்து எடுக்கப்பட்ட டிஎன்ஏவும், சந்தேகத்தின் பேரில் 30-க்கும் மேற்பட்டோரிடமிருந்து எடுக்கப்பட்ட டிஎன்ஏவும் ஒத்துப்போகவில்லை என்பதால் முதற்கட்ட முயற்சியில் குற்றவாளிகள் யாரென கண்டறிய முடியவில்லை. இதைத்தொடர்ந்து, அடுத்த கட்டமாக குரல் மாதிரி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 2 பேரிடம் குரல் மாதிரி சோதனை நடத்தப்பட்டுள்ளது. மேலும் 3 பேருக்கு நடத்துவதற்கான பணி நடைபெற்று வருகிறது.

இந்த விவகாரத்தில் திமுக அரசு அரசியல் செயல்வதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. இந்த சம்பவம்  நடைபெற்று  இரண்டு ஆண்டுகளை நெருங்கும் நிலையில்,  இதுவரையில் குற்றவாளி யார் என்பதை கண்டறிவில் காவல்துறை மெத்தனம் காட்டுவதாக கூறப்படுகிறது.  இதகண்டறியப்படவில்லை. இதனால் குற்றவாளிகளை கண்டறிந்து விரைவாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட சமயத்தில் இறையூர் பகுதி மக்கள் ஊருக்குள் மட்டுமின்றி மற்ற இடங்களிலும் பிளக்ஸ் பேனரை வைத்திருந்தனர்.

இதையடுத்து அங்கு வந்த வெள்ளனூர் போலீஸார் மற்றும் வருவாய் துறையினர் அனுமதியின்றி பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளதாக கூறி அவரை பறிமுதல் செய்தனர்.

இதைத்தொடர்ந்து, தற்போது,  அந்த பகுதி மக்கள்  குடிநீர் தொட்டி அமைந்துள்ள   இன்று மீண்டும் , குற்றவாளிகளை கண்டுபிடிக்க வலியுறுத்தியும், அத்துடன் நடைபெற உள்ள நடாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாகவும்   பேனரை வைத்துள்ளனர்.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த  வருவாய் துறையினர் மற்றும் போலீஸார் அப்பகுதிக்கு குவிந்துள்ளனர். அவர்கள்  மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.