சென்னை: மக்களவைத் தேர்தலையொட்டி,  தமிழ்நாட்டில் இதுவரை ரூ.460.84 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும், வேட்பாளர் வாகனத்தை முறையாக பரிசோதனை செய்யாததால், நீலகிரியில் பறக்கும் படை குழுவின் தலைமை பொறுப்பாளர் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளதாகவும், மாநில தலைமை தேர்தல் ஆணைர் சாகு தெரிவித்து உள்ளார்.

தமிழ்நாட்டில் வரும் 19ந்தேதி  மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த முறை 4 முனை போட்டி நிலவி வருகிறது. களத்தில் 950 வேட்பாளர்கள்: தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதிகளிலும் 609 சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 950 பேர் போட்டியிடுகின்றனர். இதில் ஆளும் திமுக சார்பில் 23, அதிமுக 34, பாஜக 23, காங்கிரஸ் 9 மற்றும் பகுஜன் சமாஜ், நாம் தமிழர் கட்சி சார்பில் தலா 39, பாமக சார்பில் 10 பேர், நாடாளும் மக்கள் கட்சி சார்பில் 12 பேர் களத்தில் உள்ளனர். இறுதிக்கட்ட அனல்பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில்,  முதற்கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களில், மொத்தம் ரூ.4,650 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.  அதாவது, . ரூ.395.39 கோடி ரொக்கம், ரூ.1,142 கோடி பரிசுப் பொருட்கள், ரூ.562.10 கோடி மதிப்புள்ள நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை ரூ.460.84 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.  மேலும், நாட்டிலேயே,  அதிகபட்சமாக ராஜஸ்தான் மாநிலத்தில் ரூ.778 கோடி; குஜராத் மாநிலத்தில் ரூ.605 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டு உள்ளது.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலின்போது ரூ.3,475 கோடி பறிமுதலான நிலையில் தற்போது ரூ.4,650 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.2,500 கோடி மதிப்பில் மதுபானங்கள் மற்றும் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தேர்தலில் பண பலத்தை கட்டுப்படுத்தும் மிகப்பெரிய நடவடிக்கை இது என தலைமை தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், நீலகிரியில் பறக்கும் படை குழுவின் தலைமை பொறுப்பாளரை சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வேட்பாளரின் வாகனத்தை முறையாக சோதனை செய்யவில்லை என புகார் எழுந்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்,

இரவு 10 மணிக்கு பிறகு எந்த விதமான பிரச்சார செயல்பாடுகளும் நடைபெறக்கூடாது. இதனை மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கபடும். மேலும், அண்ணாமலைமீது கோவை தேர்தல் அதிகாரிகள் தொடுத்த விதிமீறல் வழக்கு தொடர்பாக போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என உறுதியளித்தார்.