விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே குடிநீர் கிணற்றில் மனித கழிவுகள் கலக்கப்பட்டு உள்ளதாக அந்த பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில், குடிநீரில் கழிவுநீர் கலப்பு, குடிநீர் தொட்டிகளில் மலம் உள்பட தேவையற்ற பொருட்கள் கலந்து அசுத்தமாக்கப்படும் நிகழ்வுகள் அடுத்தடுத்து அரங்கேறி வருகின்றன. கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு வேங்கை வயல் பகுதியில் உள்ள உயர்நிலை குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் இன்றுவரை குற்றவாளிகளை கைது செய்யப்படவில்லை. இது திமுக அரசு மீது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து, பள்ளி குடிநீர் தொட்டி என பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், விக்கிரவாண்டியில் குடிநீர் வழங்கும் திறந்தவெளி கிணற்றில், மனித மலம் கழிக்கப்பட்டதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த கஞ்சனூர் அருகே கிணற்றில், மனித மலம் கழிக்கப்பட்டதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்த திறந்தவெளி கிணறிலிருந்து மோட்டார் மூலம் 100 வீடுகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. அருகே உள்ள கே.ஆர்.பாளையம் கிராமத்தில் வசிக்கும் 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு விநியோகித்ததால், மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இந்த குடிநீரில் மலம் கலந்த வாசனை ஏற்பட்டுள்ளதது. இதையடுத்து கிணற்றை பார்த்த பொதுமக்கள், அந்த திறந்தவெளி கிணற்றில் மனித கழிவுகள் கலக்கப்பட்டு இருப்பதாக குற்றம் சாட்டி உள்ளனர்.
இந்த கிணற்றிலிருந்து எடுக்கப்படும் தடுப்பு சுவரின் மீது ஏறி அமர்ந்து கிணற்றில் மலம் கழித்ததாக மக்கள் குற்றம் சாடியுள்ளார். புகார் குறித்து கஞ்சனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் நிகழ்விடத்தில் நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மலம் கலந்த உத்திரமேரூர் பள்ளி தண்ணீர் தொட்டி இடித்து அகற்றம்! கலெக்டர் நடவடிக்கை…
தமிழ்நாட்டில் தொடரும் அவலம்: பள்ளி குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கரைப்பு – காவல்துறை விளக்கம்!
அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் பினாயில் ஊற்றிய 3 சிறுவர்கள்…!