சென்னை: தமிழ்நாடு அரசின் பாரபட்சமான நடவடிக்கையை கண்டிதுருது, வேங்கைவயல் மற்றும் நெல்லை பெரும்பத்து கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு  செய்துள்ளனர். அவர்களிடம்  அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த 2024ம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது,  காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் உள்ள ஏகனாபுரம் கிராமம், புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல், இறையூர் கிராமங்கள், ஓசூரின் கருக்கனஹள்ளி கிராமம், சிவகங்கை மாவட்டம் இளையாங்குடி அருகேயுள்ள சித்தூரணி என பல்வேறு கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டன.

இந்த நிலையில், தற்போது வேங்கைவயல் மற்றும் பெரும்பத்து கிராம மக்கள் முழுமையாக சட்டமன்ற தேர்தலை புறக்கணித்துள்ளனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

வேங்கைவயல்:

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த தலித் மக்கள், இந்தத் தேர்தலைத் புறக்கணிக்கும் தங்களின் முடிவில் தற்போதும் உறுதியாக உள்ளனர்.  ஏற்கனவே அங்குள்ள குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டி வரும் அப்பகுதி மக்கள், தற்போது தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததை கங்ணடித்து தேர்தலை புறக்கணித்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல்  அருகே உள்ள கந்தர்வக்கோட்டை (தனி) தொகுதிக்கு உட்பட்ட இந்த கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள நிலையில், கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததை முன்வைத்து அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

இது தொடர்பாக இரண்டு வாரங்களுக்கு முன்பு அதிகாரிகள் நடத்திய அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தாலும், அவர்களைத் தொடர்ந்து சமாதானம் செய்து வாக்களிக்க வைக்க அதிகாரிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2024 மக்களவைத் தேர்தலின் போதும் இதே போன்ற புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட இவர்களை, அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வாக்களிக்க வைத்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த முறை கிராம மக்கள் தங்களின் நிலைப்பாட்டில் மிகவும் பிடிவாதமாக இருப்பது அதிகாரிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை பெரும்பத்து கிராமம்:

நெல்லை மாவட்டம், நாங்குநேரி பெரும்பத்து கிராம மக்களும் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.  ஒ கடந்த மார்ச் 2-ஆம் தேதி, சாதிய வன்மம் கொண்ட ஏழு ரவுடிகள் நடத்திய அரிவாள் தாக்குதலில் இரண்டு பேர் உயிரிழந்தனர் மற்றும் ஆறு பேர் காயமடைந்தனர். இந்த விஷயத்தில் திமுக அரசு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டும் அப்பகுதி மக்கள்,   இந்த தாக்குதலைக் கண்டித்து, அந்த கிராமத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட (BC) மற்றும் பட்டியலின (SC) சமூகத்தினர் தேர்தலைப் புறக்கணித்தனர்.

சுமார் 974 வாக்காளர்கள் வசிக்கும் இந்த கிராமத்தில் இதுவரை ஒருவர் கூட வாக்களிக்கவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள், என்ன செய்வெதன்று தெரியாமல் விழிபிதுங்கி உள்ளனர்.

[youtube-feed feed=1]