சென்னை:

வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்டு 5ந்தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு இன்று  வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.

திமுகவினரின் பணப்பட்டுவாடா காரணமாக  கடந்த ஏப்ரல் 16ம் தேதி நடைபெற வேண்டிய வேலூர் லோக்சபா தேர்தல் ரத்து செய்யப்பட்டட நிலையில்,, ஆகஸ்டு மாதம்  5ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

அதன்படி  வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை இன்று முதல் 18ம் தேதி வரை தாக்கல் செய்யலாம்.‌

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.

வேலூர் தொகுதியில்  அதிமுக கூட்டணி கட்சி சார்பில் வேட்பாளாரக அறிவிக்கப்பட்டுள்ள புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் இன்று முற்பகல் 11 மணிக்குமாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சண்முக சுந்தரத்திடம் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

திமுக வேட்பாளர் திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன், கதிர் ஆனந்த்‌ நாளை  வேட்புமனு தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களுடன் நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி போட்டிகிறார். அமமுக போட்டியிடவில்லை என அறிவித்து உள்ளது.  மக்கள் நீதி மய்யம் போட்டியிடுமா என்பது இன்னும் தெரிவிக்கப்படவில்லை.