சென்னை

ட்டுமான கழிவுகளை பொது இடங்களில் கொட்டினால் அந்த வாகனங்களை பறிமுதல் செய்யச் சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்

சென்னை மாநகரில் குப்பைகளைச் சுத்தம் செய்யும் பணிகளை ஊக்குவிக்க, சென்னை மாநகராட்சி கண்காணிப்பு பணியைத் தீவிரப்படுத்தியுள்ளது.  குறிப்பாக சென்னையைக் குப்பையில்லா மண்டலமாக மாற்றச் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அனைத்து மண்டலங்களிலும் ஆய்வு நடத்தி, தனிநபர்களுக்கு எதிராக அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் பேருந்து வழித்தட சாலைகள் மற்றும் உட்புற சாலைகள் சுத்தமாக இருப்பதை உறுதி செய்யவும், பொதுமக்கள் சாலையில் குப்பை கொட்டாமல் இருக்கவும் மண்டல அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் பொது இடங்களில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2019ன் படி சென்னை நகரத்தைத் தூய்மையாக வைத்திருக்க. சாலையில் குப்பை மற்றும் கட்டுமான கழிவுகளைக் கொட்டுபவர்களுக்கு மாநகராட்சி அபராதம் விதித்துள்ளது. தவிர கட்டிடக் கழிவுகளைக் கொட்டுவோரின் வாகனங்களைப் பறிமுதல் செய்யச் சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.