சிங்கப்பூர் சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு சிங்கப்பூர் தமிழ் அமைப்புகள் சார்பில் சிறப்பான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பங்கேற்றுப் பேசிய மு.க. ஸ்டாலின் சீர்திருத்தங்களை ஏற்படுத்திய நாடு சிங்கப்பூர் என்றும் அந்நாட்டை உலகம் வியக்க முன்னேற்றியவர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ.

சிங்கப்பூரின் தந்தை என போற்றப்படும் லீ குவான் யூ சிங்கப்பூரை மட்டுமன்றி இங்குள்ள தமிழர்களையும் உயர்த்தியவர்.

அவருக்கு தமிழ்நாட்டின் மன்னார்குடியில் நினைவுச் சின்னம் வைக்கப்படும் என்று மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தவிர தமிழ்நாட்டில் நடைபெற இருக்கும் உலகத் தமிழ் மாநாட்டில் கலந்து கொள்ள சிங்கப்பூர் தமிழர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.