பெங்களூரு

த்திய அரசை எதிர்த்து இன்று கர்நாடகா மாநிலத்தில் முழு கதவடைப்பு நடைபெறுவதால் தமிழக வாகனங்கள் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன

மகதாயி நதிநீர் பங்கீடு குறித்து கர்நாடகா மாநிலத்துக்கும் கோவா மாநிலத்துக்கும் இடையில் பிரச்னை வலுத்து வருகிறது.   கர்நாடகா மாநிலத்தில் குடிநீர் பஞ்சம் இருப்பதாகவும் அதற்காக மகதாயி நதி நீரை கர்நாடகத்துக்கு திறந்து விடக் கோரியதற்கு கோவா மறுத்து விட்டது.

இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு  கர்நாடகா மாநிலத்துக்கு நதி நீர் அளிக்க கோவாவுக்கு உத்தரவிடக் கோரி கன்னட அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.   தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு கதவடைப்பு நடைபெறப் போவதாக அறிவித்துள்ளன.

இந்த கதவடைப்பை அடுத்து தமிழ்நாட்டில் இருந்து செல்லும் அனைத்து பேருந்துகளும்  எல்லைப் பகுதியான ஓசூரில் நிறுத்தப்பட்டுள்ளன.     தமிழக பதிவு எண் கொண்ட மற்ற வாகனங்களும் ஓசூரை தாண்டிச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வருகின்றன.