சென்னை

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தேர்தலைச் சந்திக்க அஞ்சுவதாக வி சி க துணைப் பொதுச் செயலர் ஆளூர் ஷ நவாஸ் விமர்சித்துள்ளார். 

 

நாஇபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தற்போது மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கும் மத்திய அமைச்சர்கள் பலரை வேட்பாளர்களாக பாஜக களம் இறக்கி உள்ளது. ஆயினும் கர்நாடகாவிலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்வான மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை.

நிர்மலா சீதாராமன் இது குறித்துக் கூறுகையில்,

“ஆந்திராவிலோ அல்லது தமிழ்நாட்டிலோ தேர்தலில் போட்டியிடுமாறு பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா என்னை கேட்டுக்கொண்டார். ஆனால் நான் போட்டியிடவில்லை என்று கூறிவிட்டேன். தேர்தலில் போட்டியிடும் அளவிற்கு என்னிடம் பணம் இல்லை” 

என்று தெரிவித்தார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலர் ஆளூர் ஷா நவாஸ் தனது எக்ஸ் தள பதிவில்,

பாஜக  ஏழைத் தாயின் மகன் மோடிக்கும் ஏழை விவசாயி அண்ணாமலைக்கும் தேர்தலில் போட்டியிடச் செலவு செய்யும் போது நிர்மலாவுக்கு செலவு செய்யாதா?அவருக்கு வாக்கு வலிமையுள்ள சாதி பின்புலம் இல்லாததால் போட்டியிடவில்லை என்றால், 80% இந்துக்களின் பிரதிநிதி என்று இத்தனை நாளும் சொன்னது பொய்யா?. தேர்தலை சந்திக்க அவருக்கு அச்சம்.” 

எனத் தெரிவித்துள்ளார்.