19வது நினைவு தினம்: ராஜீவ் பவனில் அமைந்துள்ள வாழப்பாடியாரின் உருவ சிலைக்கு தலைவர்கள் மரியாதை…

Must read

சென்னை: மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் வாழப்பாடி கூ இராமமூர்த்தியின் 19வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை ஆர்.ஏ.புரம்  ராஜீவ் பவனில் அமைந்துள்ள வாழப்பாடியாரின் உருவ சிலைக்கு, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரமுகர்கள், சமூதாய தலைவர்கள் மாலை அணிவித்து  மரியாதை செலுத்தினர்.

குமரி மாவட்ட காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த் மற்றும், தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரிய தலைவராக பொன்.குமார் உள்பட பலர் நேரில் வந்து மலர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

வாழப்பாடி கே.ராமமூர்த்தியின் 19வது ஆண்டு நினைவு தினம் இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் அனுசரிக்கப்படுகிறது. அதையொட்டி, சென்னை ஆர்.ஏ.புரம் ராஜீவ் பவனில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ்  கட்சி பிரமுகர்கள் மற்றும் சமுதாய பிரமுகர்கள் மலர்மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை, வாழப்பாடி ராமமூர்த்தியின் மகன்களான அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் மற்றும் மாநில துணைத்தலைவர் இராம சுகந்தன், அகில இந்திய கிராம தொழிலாளர் சம்மேளன நிர்வாகி இராம கர்ணன் ஆகியோர் வரவேற்றனர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் உள்ள வாழப்படியார் நினைவிடத்தில் சேலம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள  காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் சமுதாய தலைவர்கள்  மலர்தூவி மரியாதை செய்தனர்.

 

“வாழப்பாடி யார்”… என்கிற அந்த ஒற்றைச் சொல்லுக்கு ஓராயிரம் அர்த்தங்கள் உண்டு!

 

More articles

Latest article