சுல்தான்பூர்
கோரக்பூர் மருத்துவமனையில் பல குழந்தைகள் இறந்ததின் எதிரொலியாக சுல்தான் பூரில் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய மருத்துவமனை அமைக்கப் போவதாக வருண்காந்தி அறிவித்துள்ளார்.
சுல்தான்பூர் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் வருண் காந்தி, இவர் தனது சுல்தான்பூர் தொகுதியில் ஒரு குழந்தைகள் மருத்துவமனை நிறுவப்போவதாக அறிக்கை விடுத்துள்ளார்
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :
”கோரக்பூரில் நடந்த துக்ககரமான நிகழ்வினால் மனம் பாதிக்கப்பட்டுள்ளேன். இது போல மற்றொரு சோக நிகழ்வு எங்கும் நிகழக் கூடாது. அதை தடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுக்கும் பொறுப்பு நம்மிடம் உள்ளது,
எனவே நான் சுல்தான்பூரில் ஒரு மாதிரி குழந்தைகள் மருத்துவமனை நிறுவ உள்ளேன். இது குறித்து இன்று சுல்தான்பூர் மாவட்ட அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன், அதையொட்டி சுல்தான்பூரின் பாராளுமன்ற உறுப்பினராகிய நான் எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ, 5 கோடியை இந்த பணிக்கு அளிக்கிறேன் இந்த மருத்துவமனையை மாவட்ட அரசு மருத்துவமனையின் வளாகத்தில் அமைக்க மாநில கட்டுமானத்துறையைக் கேட்டுக் கொண்டுள்ளேன். நான் எனது பங்கான ரூ.5 கோடிக்கான காசாலையை இத்துடன் இணைத்துள்ளேன். மேலும் தேவையான நிதி உதவியை வேறு சில தாளாளர்களிடம் இருந்து வாங்கித் தருகிறேன். இன்னும் ஆறு மாதங்களில் இந்த மருத்துவமனை இயங்கும்
இந்த மருத்துவமனையில் குழந்தைகளுக்கு நீர் மற்றும் காற்று மாசுபடுவதினால் ஏற்படும் உடற்கோளாறுகளை கண்டறிய ஆய்வகங்கள் ஏற்படுத்தப்படும் இதற்கான நிதி உதவிகளை மத்திய மாநில அரசுகளிடம் இருந்து தனியாரிடம் இருந்து பெறப்படும்.
இந்த மருத்துவமனையில் குழந்தைகளுக்கு இலவச தடுப்பூசிகள் போடப்படும். இது தவிர குழந்தைகளுக்கான மருந்து விற்பனை நிலையமும் தொடங்கப்படும். இங்கு குழந்தைகளுக்கான மருந்துகள் குறைந்த விலையில் வழங்கப்படும். அவசர சிகிச்சை பகுதியும், 100 படுக்கைகள் கொண்ட உள் நோயாளிகள் பிரிவும் தொடங்கப்படும். இதில் 24 மணி நேரமும், குடிநீர், கழிவறை, ஆக்சிஜன், மின்சாரம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளப்படும். இந்த மருத்துவமனைக்காக மட்டும் 3 ஆம்புலன்சுகள் இயக்கப்படும்.
இதே போல ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் தனது தொகுதியில் ஒரு மருத்துவமனையை நிறுவ வெண்டும் என்பதே என் ஆசை. அதே போல வேறு யாரும் மருத்துவமனைகளை நிறுவினால் அதற்கும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் உதவ வேண்டும்.
இதற்கான ஆலோசனைகளை எனக்கு அவசியம் அளிக்க வேண்டும்”
என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது