சென்னை,
வர்தா புயல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய சென்னை வந்துள்ள மத்திய குழு இன்று இரண்டாவது நாளாக தனது ஆய்வுகளை மேற்கொள்கிறது.
தமிழகத்தில் வர்தா புயல் காரணமாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் கடும் சேதத்துக்கு உள்ளாகின. சேதங்களை சரிசெய்து இயல்பு நிலைக்கு மாற்ற நிவாரணம் தேவை என்று பிரதமர் மோடியை சந்தித்து தமிழக முதல்வர் பன்னீர் கோரிக்கை வைத்தார்.
அதைத்தொடர்ந்து மத்தியஅரசு, புயல் சேதம் குறித்து வசிஷ்டா தலைமையில் மத்திய குழுவை தமிழகத்திற்கு அனுப்பி உள்ளது.
நேற்று தமிழகம் வந்த மத்திய குழுவினர் தமிக முதல்வர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அதன்பின் புயல் சேதம் குறித்து சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்தனர்.
பின்னர் இக்குழு இரண்டாகப் பிரிந்து இதில் ஒரு குழு, திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு, ஆலாடு பகுதிகளில் ஆய்வு செய்தது. ஆய்வின்போது மீனவ படகுகள், மீன் வலைகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் பயிர் சேதம் குறித்தும் ஆய்வு செய்தது.
இதனையடுத்து, மத்திய குழுவில் அங்கம் வகிக்கும் மத்திய வேளாண்மை துறை இயக்குனர் மனோகரன் செய்தியாளர்களிட்ம கூறியதாவது,
வர்தா புயலை முன்னிட்டு தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பாராட்டுக்கு உரியவை என தெரிவித்தார். ஆய்வுகளின் முடிவில், இக்குழு தனது அறிக்கையை, மத்திய அரசிடம் சமர்பிக்கும் என்றும் அவர் கூறினார்.
இன்று, ராயபுரம் மீன்பிடி கட்டமைப்பு பாதிப்புகளை இன்று ஆய்வு செய்த பின், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மத்தியக்குழு ஆய்வு மேற்கொள்ளவுள்ளது.
Also read