டில்லி

நாட்டின் அதிவேக ரெயிலான ரெயிலான 18 ரக முதல் ரெயிலுக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக ரெயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

நாட்டில் எஞ்சின் இல்லாமல் செல்லக்கூடிய அதிவேக ரெயில் முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ரெயில் 18 ரக ரெயில் என அழைக்கப்படுகிறது. இந்த ரெயில் புல்லட் ரெயில் போல தோற்றம் கொண்டுள்ளது. சுமார் 18 மாதங்க்ளில் இந்த ரெயில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ரெயில் 18 ரக ரெயிலின் முதல் ரெயில் டில்லி மற்றும் வாரணாசி இடையே இயக்கப்பட உள்ளது. இதற்கான வெள்ளோட்டம் ஏற்கனவே நடைபெற்று வெற்றி பெற்றுள்ளது. இது குறித்து ரெயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் வெளியிட்டுள்ள அறிக்கையில் “எஞ்சின் இல்லாமல் தயாரிக்கப்பட்ட இந்த அதிவேக ரெயில் 18 ரேபரேலியில் உள்ள மாடர்ன் கோச் ரெயில் ஃபாக்டரியில் உருவாக்கபட்டுள்ளது.

தோற்றத்தில் புல்லட் ரெயில் போல் காட்சி அளிக்கும் இந்த ரெயில் ஷதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு பதிலாக இயக்கப்பட உள்ளது. இதற்காக பல பெயரை பொதுமக்கள் பரிந்துரை செய்தனர். இறுதியாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்னும் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. விரையில் இந்த ரெயில் சேவையை பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கை வைப்பார்” எனதெரிவித்துள்ளார்.