பொங்கலுக்கு ரிலீசாக தயாராக இருக்கும் விஜய்யின் ‘வாரிசு’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடலுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பாக தில் ராஜூ தயாரித்துள்ளார்.

ராஷ்மிகா மந்தனா பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ரிலீசாக இருக்கிறது. அதற்கான போஸ்ட் புரொடக்சன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடலுக்கான ப்ரோமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது :